
அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை இடைநிறுத்திய ஜாகுவார் லேண்ட் ரோவர்
பிரித்தானியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் (JLR), ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பரஸ்பர வரியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் இந்தியாவின் டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான கோவென்ட்ரியை தளமாகக் கொண்டமைந்துள்ளன.
குறித்த வரியால் கார்களின் விலைகளில் ஏற்படப்போகும் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் அதிகரித்த செலவுகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பது குறித்தும் முடிவுக்கு வந்தபிறகே இந்த ஏற்றுமதி தொடரப்படும் என நம்பப்படுகிறது.
அமெரிக்க சந்தையில் அதன் வருடாந்திர வாகன விற்பனையில் கால் பங்கை குறித்த நிறுவனங்கள் கொண்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்