அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்பதற்குத் தயார் – யுக்ரைன்

30 நாட்களுக்குத் தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்பதற்குத் தயாரென யுக்ரைன் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் அமெரிக்காவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, யுக்ரைன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

‘நேர்மறையான’ திட்டத்துக்கு ரஷ்யாவை ஒப்புக் கொள்ள வைப்பது தற்போது அமெரிக்காவின் பொறுப்பாகும் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

யுக்ரைனின் இந்த இணக்கப்பாடு தொடர்பில் ரஷ்யாவுக்கு எடுத்துரைக்கப்படும் என நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை ரஷ்யா ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.

பின்னணியில் யுக்ரைனுக்கான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உதவிகளை உடனடியாக மீண்டும் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க