
அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி மறைவு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிக் செனி தனது (84) ஆவது வயதில் காலமானார்.
நிமோனியா மற்றும் இதயம் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் அமெரிக்காவின் 46வது துணை ஜனாதிபதி ஆவார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை ஜார்ஜ் புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தில் துணை அதிபராக இருந்தார்.
அத்துடன் வெள்ளை மாளிகையின் தலைமை தளபதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
