அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததின நிகழ்வு

-யாழ் நிருபர்-

மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்றது.

இதன்பொழுது அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டு தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் அமிர்தலிங்கத்தின் நினைவு பேருரை முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசு கட்சியின் பொருளாளர் கனகசாபபதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான துரைலிங்கம், ஜெயந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி , பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததின நிகழ்வு

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததின நிகழ்வு

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்ததின நிகழ்வு