Sri Lanka Tamil News Site

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயல்படக் கோரி பொதுமக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம்

- Advertisement -

-மன்னார் நிருபர்-

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று 6 ஆவது நாளாகவும் காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது.

- Advertisement -

இதன் போது சிவில் அமைப்புகள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -