
அனுமதியற்ற கார் கண்காட்சியில் பரஸ்பர துப்பாக்கி சூடு: மூவர் பலி
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் லொஸ் க்ரூஸ் நகரில் அனுமதியற்ற கார் கண்காட்சியொன்றில் இரண்டு போட்டி குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற பரஸ்பரத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இரண்டு ஆண்களும் 16 வயது சிறுவன் ஒருவனுமே பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.