அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் கைது

வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூவரசங்குளம் சந்தியில் போக்குவரத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இன்று புதன் கிழமை அதிகாலை 4.30 அளவில் பாரவூர்தியொன்றை வழிமறித்து சோதனையிட்ட போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த பாரவூர்தியில் ஏற்றிச்செல்லப்பட்ட 20 மாடுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மாடுகள் மல்லாவி பகுதியிலிருந்து குருநாகல் பகுதிக்குக் கொண்டுசெல்லப்பட இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க