அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வுகூறலின் அடிப்படையில் அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைள் தொடர்பான உயர் மட்ட அதிகாரிகளுக்கான பயிற்சி இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

மாவட்ட செயலகம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைத்து UNFPA மற்றும் அவுஸ்ரேலியன் அயிட் நிதி அனுசரணையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

காலநிலை மாற்றத்தினால் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது.

மாவட்டத்தில் அனர்த்தங்களினால் அதிகளவு பாதிக்கப்படும் பிரதேச செயலகங்களான மண்முனை மேற்கு,கோறளைப்பற்று தெற்கு, போரதீவு பற்று சசெயலக பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்ப பரீட்சார்த்த முன்கூட்டிய ஆயத்த நடவடிக்கை செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

தரவுகளின் அடிப்படையில் அனர்த்த பாதிப்பை குறைப்பதற்கு முன்கூட்டியே மக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இதன் போது இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், UNFPA அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க