அநுராதபுரத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிரியாகம பிரதேசத்தை சேர்ந்த பசிந்து காஞ்சன பண்டார (வயது – 17) என்ற சிறுவனொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்