Sri Lanka Tamil News Site

அத்துமீறி வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

- Advertisement -

-யாழ் நிருபர்-

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த நால்வரடங்கிய வன்முறைக் கும்பலொன்று அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹையஸ் ரக வாகனங்களின் கண்ணாடிகளை வாளால் வெட்டியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியதோடு வீட்டின் முன்புற கேற் தகரத்தின் மீதும் வாளால் வெட்டிய நிலையில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலும் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்தவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், வீட்டார் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -