
அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
புதிய அமைச்சுகளின் விடயதானங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி புதிய அமைச்சர்களின் கடமைகள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படும் பணியகங்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட விபரங்களை அறிவித்து இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.