அதிக விலையில் எரிவாயு விற்பனை செய்த தம்பதி கைது

பிலியந்தலையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பனை செய்த தம்பதி உட்பட மூவரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 12.5 கிலோ எடையுள்ள 20 எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 500 ரூபா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்