அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,406 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நேற்று செவ்வாய்கிழமை மாலை வரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இதேநேரம், நேற்றைய தினம் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 183 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், 2,638 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மிகுதி 768 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.