அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நிலவும் மழை, அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடரும், என வளிம்டலவிய் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும், என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்