அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

அடுத்துவரும் 36 மணி நேரத்தில் நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில இடங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்