அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் : அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கட்டைக்காடு பகுதியில் உள்ள மதுபானசாலையை அண்மித்த மதகு பகுதியில் இளைஞர் ஒருவர் அடி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டே வீசப்பட்டிக்கலாம் என  பிரதேச மக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த  மருதங்கேணி பொலிசார் தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இளைஞனுக்கு  நீதிமன்றில் பல்வேறு வழக்குகளும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் உள்ளதாகவும்,  முன்பகை காரணமாக குறித்த சம்பவம்  இடம்பெற்றிருக்கலாமென பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்