அடகு வைத்த நகையை மீட்க சென்ற பெண் கைது!

-சம்மாந்துறை நிருபர்-

5000 ரூபா போலி நாணயத்தாளுடன் அடகு வைத்த நகையை மீட்க சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு நகையை மீட்பதற்கு கொண்டு வரப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாளையும் சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள, ஏசியா எஸட் பினான்ஸ் பீ.எல்.சீ வங்கியில், போலி நாணயத்தாளுடன் நகையை மீட்கச் சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்தோடு நகையை மீட்பதற்காக கொண்டுவரப்பட்ட, 5000 ரூபா போலி நாணயத்தாளையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு வங்கியில் இருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே, மேற்படி நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர்.

குறித்த வங்கியில் நகையை மீட்பதற்கு நாணயத்தாள்களை பரிசோதனை செய்த போது, போலி நாணயத்தாள் இருப்பது தெரிய வந்துள்ளது.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு போலி நாணயத்தாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்