அஞ்சல் மூலம் வாக்களிக்க 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி, அஞ்சல் மூல வாக்களிப்பை செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த 3 தினங்களில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்காக செப்டம்பர் மாதம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகள் வாக்களிப்புக்கான மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்