அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்

போர் காரணமாக அங்கவீனமுற்ற முப்படை வீரர்கள் மற்றும் உயிரிழந்த வீரர்களின் மனைவியருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்க வேண்டிய கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் படி குறித்தவொரு இராணுவ வீரர் 55 வயதுக்கு முன்னர் அங்கவீனமுற்று அதன் நேரடி தாக்கத்தில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்துவார்களாக இருந்தால் அவர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும். மேலும், அவ்வாறு உறுதிப்படுத்தப்படாவிட்டால் சகல கொடுப்பனவுகளும் செலுத்தப்படாது என்பதுடன் விதவைகள் மற்றும் நிர்கதியானவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்